Sunday, April 12, 2015

இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி எதிர்கொள்வது?




வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவேமூன்று நான்கு லிட்டர் தண்ணீர்நீர்மோர்,பழங்கஞ்சிஉப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இதுஅந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுபொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள்,  பிடிப்புகள்சருமப் பாதிப்புகள்,பருக்கள்மயக்கம்குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உடலை சமமாக வைத்துக்கொள்ளவும்தண்ணீரைவிட சிறந்தது எதுவும் இல்லை.

வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துஅரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். வயிறுகண் பகுதிகளில் ஈரத்துணி அல்லது நீரில் நனைத்த பஞ்சை, 20 நிமிடங்கள் போட்டுஉலரவிடலாம். மருதாணி இலைகளை அரைத்துஉள்ளங்கைபாதத்தின் அடிப்பகுதியில்  வைத்துக்கொள்ளலாம்.

உடலில் உள்ள நீரின் அளவு குறைவதால்சருமத்தில் பருக்கள்கட்டிகள்சிவப்புத் திட்டுகள்வியர்க்குருதொடை இடுக்குகளில் அரிப்பு போன்றவை உருவாகின்றன. அதிகமாக வியர்வை வரும் நபர்களுக்குஎண்ணெய்ப் பசை பிரச்னையும் இருந்தால்அவர்களுக்கு வெயில் காலப் பருக்களும் வரும். இதற்குக் கற்றாழையின் சதைப்பகுதிதேன்வெள்ளரிக்காய் சாறுவேப்பிலை விழுதுதேங்காய் எண்ணெய்தேங்காய் வழுக்கை விழுது போன்றவற்றை உடல் முழுவதும் பூசலாம். அரசு சித்தா மருந்தகங்களில் மட் பேக்’ (Mud pack)கிடைக்கும்அதை நீரில் கலந்துஉடல் முழுவதும் தடவலாம். வயிறுகண் பகுதிகளில் மட் பேக்’ போட்டுக்கொள்ளலாம்.

அடர்ந்த நிறத்தில் சிறுநீர் கழித்தாலேஉடலில் நீரின் அளவு குறைந்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம். சிறுநீர் கழிக்கையில் வலி,எரிச்சல் ஏற்படுவது சிறுநீர்ப் பாதைத் தொற்றின் அறிகுறி. முந்தைய இரவு ஊறவைத்த வெந்தயத்தைகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அடிவயிற்றில் ஈரத்துணியை வைத்து உலரவிடலாம். தொட்டியில் இடுப்பளவு வரை நீர் நிறைத்து 20 நிமிடங்கள் வரை உட்கார்ந்திருப்பதன் மூலமும் இந்தப் பிரச்னையை சரிசெய்யலாம்.

கோடைக்கேற்ற உணவுகள்

நீர்ச்சத்துள்ள கிர்ணிதர்பூசணிவெள்ளரிமுள்ளங்கிநூல்கோல்பீர்க்கங்காய்புடலங்காய்மாதுளைஸ்ட்ராபெர்ரிநுங்குவாழைகீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினாகொத்தமல்லிஎள்ளுசீரகம்நன்னாரி விதை,வெந்தயம்எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

எலுமிச்சைபுதினாஇஞ்சிதேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும்இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

நீர்மோர்இளநீர்பதநீர்கம்பங்கூழ்கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவரஉடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு,நெல்லிச் சாறுதர்பூசணி சாறுவெள்ளரிச் சாறு,  சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமைமைதாசிக்கன்ஊறுகாய்பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

கோடை கால குறிப்புகள்





உணவை மாற்றுங்கள்

மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சிகூழ்மோர்இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறுசாம்பார்ரசம்பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய்பழங்களின் சாலட்கள்மோர் ஆகியவை


நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்கவிறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். உணவில் அதிகக் காரம்மசாலாபொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்
களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம்.

வீட்டை கூல் ஆக்குங்கள்

மாநகர்களில் ஒரே ஒரு அறையில் மட்டும் ஏ.ஸி இருக்கும் வீடுகளில் கோடைக்காலத்தில் திண்டாட்டம்தான். இரண்டு பெட்ரூம்களிலும் ஏ.ஸி வைத்திருப்பவர்கள்கூட எகிறும் மின் கட்டணத்துக்குப் பயந்துஒரே அறைக்குள் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். கணவன்மனைவிகுழந்தைகள்தாத்தாபாட்டி எனஎல்லோரும் ஒரே அறையில் நெரிசலை அதிகப்படுத்தினால் இடநெருக்கடியோடு,மனநெருக்கடியும் சேர்ந்துவிடும். வெயிலுக்குப் பயந்து ஒரே அறைக்குள் ஒடுங்குவதைவிடகுடியிருக்கும் வீட்டை குளிர்ச்சியாக்குவது பற்றி யோசிக்கலாம். கிடைக்கிற இடங்களில் எல்லாம் செடிகள் வளர்ப்பதுகூரைக்குக் கீழே தெர்மோகோல் அமைப்பதுமாடியில் தோட்டங்கள் அமைப்பதுஇளநிற பெயிண்டுகள் அடிப்பது எனவீட்டை வெயிலில் இருந்து பாதுகாத்துசெயற்கைக் குளிரூட்டிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துவிடலாம்.

நோ ஃப்ரிட்ஜ்

வெயிலில் இருந்து வீட்டுக்குள் நுழைந்ததும்நம் கைகள் திறப்பது ஃப்ரிட்ஜைத்தான். சில்லென தண்ணீரோஜூஸோ குடித்தால்தான் நமக்கு உயிர் வரும். இதைவிட தொண்டைக்கு ஆபத்து தருவது வேறொன்று இல்லை. அதிக வெப்பநிலைஅடுத்த நொடியே அதிகக் குளிர் என்கிற வெப்பநிலை மாற்றங்களை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ‘‘வெயில் காலத்துலகூட ஏன் ஜலதோஷம் பிடிக்குது?’’ என்று சந்தேகக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் இந்த ஃப்ரிட்ஜ் தண்ணீர்தான். அறை வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதே எப்போதும் சிறந்தது. சில்லென்ற தண்ணீர்தான் வேண்டும் என்பவர்கள்மண்பானைத் தண்ணீரைப் பயன்படுத்தலாம். சாலை ஓரங்களில் குவித்துவைக்கப்பட்டிருக்கும் மண்பானைகளில்சிவப்பு நிறத்துக்காக ரெட் ஆக்ஸைட் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடலுக்குக் கெடுதல்தான் என்பதால்மண்பானை வாங்கும் முன் பானையின் தரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.

வெப்ப காலத்தில் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போய்விடும் என்பதால்ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப்பொருட்களைச் சூடுபடுத்தி உண்ணாமல்அவ்வப்போது சமைத்துப் பயன்படுத்தலாம்.
ஆஸ்பெஸ்டாஸ் அபாயம்கோடையில் நிழலுக்காக வீட்டின் முன்புறமோபால்கனியிலோமொட்டை மாடியிலோ ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தற்காலிகக் கூரைகள் அமைப்பது வழக்கம். அந்த ஷீட் மெலிதாக இருப்பதால்சூரிய வைப்பத்தை அப்படியே உள்வாங்கி,நமக்கு அனுப்பிக்கொண்டிருக்கும். சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகளைவிடபல மடங்கு பாதிப்புகளை இந்த ஷீட்கள் நமக்கு ஏற்படுத்திவிடும். பலவகைப் புற்றுநோய்கள் இதனால் வரும் வாய்ப்பு இருப்பதால்உலகில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஷீட்களைத் தடை செய்துள்ளன. வெயிலுக்குப் பயந்து மேற்கூரை போட திட்டமிடுபவர்கள் ஒலைக் கூரைஒடுகளால் செய்த மேற்கூரை போடலாம். ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட வேண்டுமெனில்நான்கு புறமும் காற்றோட்டமான இடைவெளியுடன்,மேற்பரப்பில் படரும் செடிகளை வளர்த்துசூட்டை குறைத்துக்கொள்ளலாம்.

சாலையோர ஜூஸ் கவனம்

பயணங்களில் சூரியன் ஸ்ட்ரா போட்டு நீரை உறிஞ்சநாம் தஞ்சமடைவது சாலையோரங்களில் இருக்கும் சாத்துக்குடிகரும்பு ஜூஸ் கடைகளில்தான். சாத்துக்குடியும்கரும்பும் வெயிலுக்கு நல்லது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்அதோடு கலக்கும் தண்ணீர் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பதற்கு யாரும் உத்தரவாதம் தர முடியாது. கூடவேஅதில் கலக்கும் ஐஸ் கட்டிகள் எந்தத் தண்ணீரில் தயாரிக்கப்படுகின்றன என்பதும் தெரியாது. இந்தத் தண்ணீர் வயிற்றுப்போக்குவாந்தி உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி,உடலில் நீர் இழப்பை ஏற்படுத்திவிடும். அவசியம் ஜூஸ் வேண்டும் எனில் ஐஸ் கட்டியையாவதுத் தவிர்க்கலாம். சுத்தமான தண்ணீர் பாட்டில் ஒன்றை எப்போதும்  உடன் வைத்திருப்பது பலவிதங்களில் நன்மை தரும்.

வியர்க்க வியர்க்கக் குளிக்காதீர்கள்!

தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால்உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள்தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும்டவலால் துடைத்து வியர்வையை அகற்றுங்கள். சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கவைக்கலாம். வியர்வையோடு குளிப்பதுவியர்வை வழியவழிய முகம் கழுவுவது இரண்டுமே தவறு.
Dear Friends!
                     This Blog is created for Postal purpose only. You can use this Blog for MTS, Postman, PA & IPO examinations. Not only that you can clear your all doubts here.....
               
                     Let us come to join this blog and move forward!